FATHER'S DAY
சிறு வயதில் என்னை வைத்தாய் சிரிக்க…
மனதினில் கஷ்டங்கள் பல உன்னை வதைக்க…
கஷ்டங்களை காட்டாமல் என்னை வளர்க்க…
எல்லாவற்றையும் மனதினில் நீயும் புதைக்க…
கடவுளோ வைத்தான் உன்னை பல கண்டங்கள் தாண்டி பறக்க…
உன் கையை தொட்டு பல வருடங்கள் போக…
வந்தது எனக்கும் பல சவால்கள் மழை ஆக…
காலம் செல்ல செல்ல நானும் உயரம் போக…
இருந்தாய் நீயும் எனக்கு குடை ஆக…
ஊரில் யாரும் நினையாததெல்லாம் நீ சாதிக்க…
கடவுளும் செய்தான் பல லட்சங்களை சம்பாதிக்க…
ஊரில் யாராவது உன் உதவியை யாசிக்க…
நீயும் விட்டதில்லை அவர்களை பாதிக்க…
கடவுளும் தந்தான் எல்லாவற்றையும் எனக்கு உன் மூலம்…
நீயும் இல்லையென்றால் விளங்கும் சுமந்த பாரம்…
ஊரிலோ நீ செய்த உதவிகள் ஏராலம்…
யாரும் குறைசொன்னதில்லை உன்னை ஒரு நாளும்…
குடும்பத்திற்காக நீயும் செய்தாய் உன் வாழ்வை அர்ப்பணம்…
என் தந்தையே, தந்தையர் தினமன்று உனக்கு இது சமர்ப்பணம்…
To My lovely Dad…
#Amhr❤️
Happy Father’s Day…!❤️